Header Ads

  • சற்று முன்

    திருக்கோவில்களில் 2ஆயிரம் கிலோ தங்கம் தேக்கம்... வைப்பு நிதியாக வைக்க அரசு திட்டம்...

     


    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் தேக்கமடைந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

    சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புணரமைக்கவும், திருச்செந்தூர், சோளிங்கர் மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து, தேவையான வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

    மேலும், முக்கிய மலைக்கோவில்களான திருத்தணி, திருச்சி, திருச்செங்கோடு, கோளிங்கர், திருக்கழிக்குன்றம் ஆகிய 5 இடங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக ரோப் கார்  விரைவில் கொண்டுவரப்படும் என்றும்  அமைச்சர் தெரிவித்தார். அதோடு தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, அதற்கென தனியே குழு அமைத்துள்ளதாகவும், 180 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த  நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார்.

    மேலும் கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயனும் இன்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் வரும் வட்டியை கோவில் பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad