Header Ads

  • சற்று முன்

    காதல் திருமணத்தால் மகளை வெட்டி கொன்ற தந்தை...


    தென்காசி மாவட்டம் ஊத்துமலையை அடுத்த தெற்கு காவலாகுறிச்சி சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது மகள் ஷாலோம் ஷீபா (19). இவரும், அதே ஊரை சேர்ந்த முத்துராஜ் என்பரும் காதலித்து வந்தனர். இவர்களின்  காதல் விவகாரம் பற்றி அறிந்த  மாரிமுத்து எதிர்ப்பு தெரிவித்தார். அதனை மீறி கடந்த ஆண்டு ஷாலோம் ஷீபா, முத்துராஜை திருமணம் செய்து கொண்டார்.

    காதல் திருமணம் செய்ததால்  மாரிமுத்து, தனது மகளை வீட்டில் சேர்க்காமல் இருந்துள்ளார். இந்நிலையில்  ஷாலோம் ஷீபா, முத்துராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வேதனையடைந்த ஷாலோம் ஷீபா, இதுகுறித்து தாயார் பாக்கியலட்சுமியிடம் கூறுவதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.


    அப்போது, வீட்டில் இருந்த மாரிமுத்து, ஷலோம் ஷீபாவை ஏன் தனது வீட்டிற்கு வருகிறாய் என்று திட்டி தந்தை – மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து வீட்டில்  இருந்த  அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.


    படுகாயம் அடைந்த ஷலோம் ஷீபாவை அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடி நிலையில் நெல்லை அரசு மருத்துவமனியில் கொண்டு அனுமதித்தனர்.அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார், தப்பியோடிய மாரிமுத்துவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad