Header Ads

  • சற்று முன்

    ராக்கெட் வேகத்தில் கேஸ் சிலிண்டர் விலை...


    மக்களின் அத்தியாவசித் தேவைகளில் ஒன்று சமையல் கேஸ். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வது நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளது.

    இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஜூலை 1ம் தேதி இன்று முதல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும், 25 ரூபாய் உயர்ந்து 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


    கடந்த 6 மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை 140 ரூபாய் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021 ஜனவரி மாதத்தில் ஒரு சிலிண்டரின் விலை 710 ரூபாயாகவும்,. பிப்ரவரி மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் மாதத்தில் 835 ரூபாய்க்கும், ஏப்ரல் மாதத்தில் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 825 ரூபாய்க்கு விற்பனையானது.  மே, ஜூன் மாதங்களில் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    ஆனால்  ஜூலை 1 (இன்று)   ஒரு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்துக்கொண்டே செல்வது நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad