Header Ads

  • சற்று முன்

    மூக்கால் ஓவியம் வரைந்த ரசிகர் - நடிகர் சூர்யா நெகிழ்ச்சி...

    நடிகர் சூர்யாவின் 46 வது பிறந்த நாள் கடந்த 23 ஆம் தேதி அவரது ரசிகர்களால்  விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விதவிதமான ஹேஷ்டேக்களை உருவாக்கி இணையதளத்தில் பதிவிட்டன. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த இந்திரஜித் தாவ் என்ற ரசிகர் ஒருவர் சூர்யாவின் புகைப்படத்தை தனது மூக்கால் சுவற்றில் வரைந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

    இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் இந்த வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் நடிகர் சூர்யா ட்விட்டரில் நன்றி தெரிவித்து வருகிறார். அதனை தொடர்ந்து தனது புகைப்படத்தை மூக்காலே வரைந்து தன்னை கவர்ந்த ரசிகர் இந்திரஜித் தாவுக்கு  நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவினை சூர்யா ரீ-ட்விட் செய்து, இது தனது மனதில் நிழலாடுவதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad