Header Ads

  • சற்று முன்

    விஜய்க்கு கதை சொன்னா .. தற்கொலையே பண்ணிருப்பேன்..!! - மனம் திறந்த மிஷ்கின்..

     


     தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின்.. இவரது படங்களான அஞ்சாதே’,’நந்தலாலா’, ’யுத்தம் செய்’, ’முகமூடி’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ’பிசாசு’, ’துப்பறிவாளன்’, ’சைக்கோஉள்ளிட்ட படங்கள்  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    வித்தியாசமான கதைக்களம், எதார்த்தமான கதாப்பாத்திரங்கள் என தனது படைப்பில் எப்போதுமே தனித்துவம் காட்டும் மிஷ்கின், சித்திரம் பேசுதடி திரைப்படத்தை விஜய்க்காக எழுதியதாக தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சித்திரம் பேசுதடி’. இது அவரது  முதல் படம் என்றாலும், அந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் அதுவும் ஒன்று.. 

    இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் மிஷ்கின், நடிகர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில்,” ‘சித்திரம் பேசுதடி’ பிரிவியூ ஷோக்கு வந்த நடிகர் விஜய், அந்த படத்தை பார்த்துவிட்டு, 'அண்ணா. இதே மாதிரி எனக்கும் ஒரு படம் பண்ணுங்கனு கேட்டார். உடனே நான், இந்தப் படமே உங்களுக்காக எழுதியது தான் விஜய்னு அவரிடம் கூறினேன். உடனே என் கழுத்தை பிடிச்சுகிட்டு , ஏன் எங்கிட்ட சொல்லல? என கேட்டார். அதற்கு, நான் சொன்னேன்... சொல்லியிருப்பேன் விஜய்.. ஆனால் நீங்க நடிக்கிறதா இருந்தா உங்க அப்பா ஒரு 18 சீன் மாத்திருப்பாரு, நீங்க ஒரு 18 சீனை மாத்திர இருப்பீங்க.. நான் தற்கொலையே பண்ணியிருப்பேன். அதனால் தான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்" என தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad