Header Ads

  • சற்று முன்

    தீ விபத்து - 2 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக மாடியிலிருந்து வீசிய தாய்.... பதற வைக்கும் வீடியோ...

     


    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்யப்பட்டதால் தென்னாப்பிரிக்கா கலவர பூமியாக மாறியது. ஜேக்கப்பின் கைதுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேரணிகள் நடத்திய நிலையில் கலவரமாக மாறியது. அதில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்மருத்துவமனை உட்பட பல இடங்களுக்கு தீவைக்கப்பட்டது. இந்தக்கலவரத்தில் இதுவரை 72-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென கட்டிடங்கள் தீ பற்றி எரிந்ததால் அங்கு வசித்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    இந்நிலையில் எரிந்த கட்டிடத்தில் இருந்து தன்னுடைய 2 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் ஒருவர் மாடியில் இருந்து கீழே நின்றவர்களிடம் வீசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தீப்பற்றும் போது 16-வது மாடியில் இருந்த 26 வயது தாயும், 2 வயது மகளும் படிக்கட்டு வழியாக தப்பித்து ஓடி வந்துள்ளனர். கிட்டத்தட்ட முதல் மாடி வரை வந்தவர் அதற்கு மேல் படிக்கட்டு வழியாக வர முடியாத காரணத்தால் மேலே இருந்து கீழே நின்றவரிடம் குழந்தையை வீசியுள்ளார். கீழே நின்றவர்கள் குழந்தையை பாதுகாப்பாக பிடித்து காப்பாற்றியுள்ளனர். நாடு முழுவதும் பல இடத்தில் ஏற்பட்ட  தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளன என அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad