Header Ads

  • சற்று முன்

    டெல்லியில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி..

     



    டெல்லியில் பருவமழை தொடங்கியதை அடுத்து பல இடங்கள் மழைநீர் தேங்கி நிற்கிறது. முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த 10 ஆம் தேதியே பருவ மழை தொடங்கும்  எனவும், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருந்தது. 


    டெல்லி, மற்றும் கூர்கான், பரிதாபாத், லோனி தேகாட், நொய்டா, கோஹானா, சோனிபட், பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அப்போது பலத்த காற்று வீசும் என தெரிவித்திருந்தது. ஆனால், அவ்வாறு பருவமழை துவங்காததை தொடர்ந்து, இந்திய வானிலை மையம் மீது பலத்த விமர்சனம் எழுந்தது. 



    இந்நிலையில் ஓரிரு நாட்கள் தாமதத்திற்கு பின் தென்மேற்கு பருவமழை இன்று துவங்கியது. மேலும், பல இடங்களில் கனமழை கொட்டியது. பருவமழை துவங்கியதை வானிலை மையமும் உறுதி செய்தது. கனமழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதோடு பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பருவமழை துவங்கியதை தொடர்ந்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.


     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad