Header Ads

  • சற்று முன்

    மக்களே உஷார்...! சென்னையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்....


    தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னையில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில்,  டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு வைரஸ் காய்ச்சலை தடுக்க ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் தங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை  தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனோ தொற்று குறைந்திருக்கும் சூழலில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தென்மேற்கு பருவக் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மாவட்டந்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


    டெங்குவின் அறிகுறிகள்: காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad