Header Ads

  • சற்று முன்

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு...


    நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை குறைந்து வருகிறது. இதனால்  பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வருவதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 16ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

    இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டம் சுமார் 25 இமிடம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், 


    ”புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார். கொரோனா தொற்று புதுச்சேரியில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மாணவர்கள், பெற்றோர் அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு இல்லை”.பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad