Header Ads

  • சற்று முன்

    ”அப்பாவே... என் மகனாக..” : ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் சிவகார்த்திகேயன்..

     


    சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர்.

    நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த ஆர்த்திக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.


     

    இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலிபோக்க தன் உயிர் வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி... அம்மாவும் குழந்தையும் நலம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக மகன் பிறந்துள்ளதையடுத்து, அவரது ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad