Header Ads

  • சற்று முன்

    கரும்பு ஜூஸ் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி உயிரிழந்த பெண்...


    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு தத்தமங்கலத்தில் வசித்து வருபவர் திருப்பதி. இவரது மனைவி  இளவரசி (32). இவர்களுக்கு  6 வயதில் நிஷாந்தினி என்ற மகளும் 4 வயதில் பத்ரிநாத் என்ற மகனும் உள்ளார். திருப்பதி எதுமலை சாலையில்  கரும்புச்சாறு கடை ஒன்று நடத்தி வருகிறார். அதேபோல் அவரது மனைவி இளவரசி, மண்ணச்சநல்லூர் திருச்சி சாலையில் கரும்புச்சாறு கடை  நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இளவரசி  கரும்புச்சாறு பிழிந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக இளவரசியின் துப்பட்டா கரும்பு இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. அருகில் யாரும் இல்லாத நிலையில் அவர் துப்பட்டா கழுத்தை சுற்றி இறுக்கியதால் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad