Header Ads

  • சற்று முன்

    ஆண் நண்பருடன் போனில் பேசிய மகள்.... தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற தாய்...


    கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள கணுவாய்ப்பாலையத்தை சேர்ந்தவர் நாகமணி(47). இவரது மகள் நதியா(31). கடந்த 14 வருடங்களுக்கு முன்பு நதியாவிற்கும் சரவணகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சரவணகுமார் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த நதியா செல்போனில் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனால் குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை. 

    இதனை அறிந்த   நாகமணி  நதியாவை கண்டித்து வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். சமீபத்தில் தாயார் வீட்டிற்கு வந்த நதியா திரும்பவும் செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகமணி மீண்டும் நதியாவுடன் தகராரில் ஈடுபட்டுள்ளார். பின்பு, அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் நதியாவின் தலையில் நாகமணி கிரைண்டர் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார். நதியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீர்சாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த காரமடை போலீசார் சடலத்தை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றன.




     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad