Header Ads

  • சற்று முன்

    கட்டையால் நாயை அடித்து கொன்ற இளைஞர்கள் கைது...பதறவைக்கும் வீடியோ காட்சி...


    கேரள மாநிலத்தில் உள்ள அடிமலதுராவைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். இவரும், இவருடைய சகோதரர்களும் சேர்ந்து கறுப்பு நிற லாப்ரடார் என்ற இனத்தைச் சேர்ந்த நாயை புருனோ என பெயரிட்டு கடந்த 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இந்த நாய் காணாமல் போனது. 
    இதையடுத்து, கிறிஸ்துராஜூம், அவருடைய சகோதரர்களும் நாய் புருனோவை தேடிவந்தனர். இந்நிலையில், அடிமலதுரா பகுதி கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகில், நாய் புருனோவை கயிறால் கட்டிப் போட்டு 3 பேர் சேர்ந்து கம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதில், புருனோ இறந்தது. இதுகுறித்து நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜ், விழிஞம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  இன்ஸ்பெக்டர் ரமேஷ் விலங்குகள் மீதான கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். 

    சோனி என்பவர் கூறுகையில், "நாயை அடித்துக் கொன்ற அந்த மூன்று பேரும் இறந்த நாயை கடற்கரை ஓரமாக புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை நாங்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, புருனோவுக்கு நடந்த கொடுமையை வெளியுலகுக்குச் சொன்னோம்" என்றார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷிலுவயன் (20) மற்றும் சுனில் (22) ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad