Header Ads

  • சற்று முன்

    புதருக்குள் மறைந்திருந்த புலி....!!! ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் பலி....

     


    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் குஞ்சு கிருஷ்ணன்(55). விவசாயி ஆன இவர், வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, புதரில் மறைந்திருந்த புலி ஒன்று குஞ்சு கிருஷ்ணனை தாக்கியது. இதில் அவர் அலறி துடிக்கவே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது, குஞ்சு கிருஷ்ணன் புதருக்குள் சடலமாக கிடந்தார். புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

     

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது,  அந்த பகுதி மக்கள் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, அங்கு வந்த கூடலூர் எம்எல்ஏ ஜெயசீலன், கோட்டாட்சியர் சரவணன், டிஎஸ்பி சிவக்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், வன விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வராத வகையில் அகழி அமைக்க வேண்டும் எனவும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என்று முற்றுகையில் ஈடுபட்டனர்.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad