Header Ads

  • சற்று முன்

    குப்பைத்தொட்டியில் இருந்து பிறந்த ஆண் குழந்தை மீட்பு.... போலீசார் விசாரணை...


    திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி பகுதியில் உள்ள புது பள்ளிவாசல் அருகே பக்ருதீன் என்பவரது வீட்டின் அருகே குப்பை கொட்டும் இடம் உள்ளது. அங்கு  சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை குப்பைகளை  சுத்தம் செய்வதற்காக திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர் வந்தார்.  அப்போது குப்பைத்தொட்டி அருகே குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. குப்பைகளை அகற்றிவிட்டு பார்த்ததில் பிறந்த சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்தது. 

    குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், நாகராஜ் குழந்தையை மீட்டு தெப்பக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்பு  மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இது குறித்து  போலீசார் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றவர்கள் யார்? என  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad