Header Ads

  • சற்று முன்

    படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த விஷால்... மருத்துவமனையில் அனுமதி...


    புதுமுக இயக்குநரான து.ப.சரவணின் தயாரிப்பில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வரும்  படம் .படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் நடந்து வருகிறது.

    இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் யோகி பாபு, மலையாள நடிகர் பாபு ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

    நடிகர் விஷால் தன்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃப்லிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


    இந்நிலையில் நேற்று விஷால் மற்றும் நடிகர் பாபு ராஜுக்கு இடையேயான சண்டைக் காட்சி நடைப்பெற்றது. அப்போது ஏற்பட்ட விபத்தில் விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடிபட்டு மயங்கி விழுந்த விஷாலை படக்குழு மருத்துவமனையில் அனுமதித்துள்ளன. மேலும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad