Header Ads

  • சற்று முன்

    நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாராவின் “நெற்றிக்கண்”...


     

    தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர்  நயன்தாரா.. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும்  நயன், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கெனவே அவர்  நடித்த ’அறம்’,’மாயா’,’டோரா’, ’கோலமாவு கோகிலா’ ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. 

     


     

    அப்படி , கடந்த ஆண்டு நயன் நடிப்பில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான  ‘மூக்குத்தி அம்மன் ’திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, ரஜினியுடன் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதியுடன்  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

     இதில், ‘நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ’இதுவும் கடந்து போகும்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தை இயக்கிய,  மிலிந்த் ராவ்   இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

     மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நெற்றிக்கண்’  திரைப்படம் நேரடியாக  டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad