Header Ads

  • சற்று முன்

    பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை...


    பெரம்பலூர் மாவட்டம் நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (32), மனைவி சுகந்தி (20). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சுகந்தி தனது குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடலில் தீப்பற்றி அலறி துடித்தனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக  பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை நேற்றிரவு 8 மணியளவில் உயிரிழந்தது. இன்று அதிகாலை சுகந்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே திருமணமான 2 ஆண்டிற்குள் தற்கொலை செய்து கொண்டதால் பெரம்பலூர் வருவாய் கோட்டட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad