Header Ads

  • சற்று முன்

    சைக்கிளிங் சென்ற முதலமைச்சருடன் நடிகை யாஷிகா செல்பி.. ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்...


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுவாக உடற்பயிச்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவார் என அவருடன் நெருக்கமாக இருப்பவர்கள் கூறுவர். மேலும் ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். 
    தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது உடற்பயிற்சியை விடாமல் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்த நிலையில் இன்று காலை அவர் சைக்கிளிங் சென்ற வீடியோ, புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில்  போலீசார் பாதுகாப்புடன் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர்.


    இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள யாஷிகா, முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad