Header Ads

  • சற்று முன்

    காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் பெட்ரோல், கேஸ் விலை குறையுமா???

     


    சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் விழிபிதுங்கிய நிலையில் கண்ணீர் சிந்தாத குறையாக உள்ளனர். தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 94 ரூபாயையும் கடந்து உயர்ந்து கொண்டிருப்பதால் வாகன பயன்பாட்டாளர்கள் கவலை கொண்ட வண்ணம் உள்ளனர்.

    இது ஒருபுறமிருக்க அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

    அந்தவகையில், திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு , காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமையில் , நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்,  சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலையணிவித்து பாடைகட்டி , நூதன முறையில் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவ்வழியேச் சென்ற பொதுமக்கள், “காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் பெட்ரோல் விலை குறையுமா? என கிண்டலடித்துச் சென்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad