Header Ads

  • சற்று முன்

    ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்ததால் இளைஞர் தற்கொலை...


    திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரில் வசித்து வருபவர் ஆத்தி. இவரது மகன் வெங்கடேஷ்(19). பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட வெங்கடேஷ் வீரவநல்லூர் பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில், வெங்கடேஷ் தனது பெற்றோரிடம் ஸ்மார்ட் போன் வாங்கி தரும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால் பெற்றோர் போன் வாங்கி தர மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்றிரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்ற வெங்கடேஷ், இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்மார்ட்போன் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad