Header Ads

  • சற்று முன்

    மிரட்டும் தோற்றத்தில் கமல்... ‘விக்ரம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...

     


    நடிகர் கமல் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வரும் இந்தப்படத்தில், கமல் 15 வருடங்களுக்குப் பிறகு போலீஸாக நடிக்கிறார்.   

    அனிரூத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மலையாள நடிகர்கள் பகத் பாசில், அந்தோணி வர்கீஸ், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, தற்போது மீண்டும் தொடங்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ’மாஸ்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரம்’ படத்திலும் விஜய் சேதுபதியையே வில்லனாக தேர்வு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின்   ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இன்று வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த ஃப்ர்ஸ்ட் லுக்கில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் அகியோர் இடம்பெற்றுள்ளனர்.

     மேலும் இது குறித்த லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “யுத்ததால் அதோ அதோ விடியுது.. 

     சத்ததால் அராஜகம் அழியுத..

    , ரத்ததால் அதோ தலை உருளுது..

     சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது..

     துடிக்குது புஜம்..

     ஜெயிக்குது நிஜம்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

    விக்ரம் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. 

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad