Header Ads

  • சற்று முன்

    இனி பாட புத்தகங்களில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு - லியோனி...


    தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பட்டிமன்ற பேச்சாளராரும், திமுக நட்சத்திர பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனிடையே, சட்டமன்றத் தேர்தலின்போது பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, லியோனியின் நியமனத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் இன்று பொறுப்பெற்றுக்கொண்டார் லியோனி. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

     "மாணவர்களுக்கு தேவையற்ற சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும்.
    அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிமையாகவும், இனிமையாகவும் படிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும். 


    "தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, பாடப் புத்தகங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்றுள்ள திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

    ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று 2011ம் ஆண்டு கீழே வைத்த பாடப் புத்தகத்தை 10 ஆண்டுகள் கழித்து, 2021ல் மீண்டும் கையில் எடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad