Header Ads

  • சற்று முன்

    தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்...


    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றது. இது வரை மத்திய அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய உணவு மற்றும் விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் இடமும் காலியாக இருப்பதால் மொத்தத்தில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப் பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக பாஜக தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.

    முன்னதாக நரேந்திர மோடியுடன் சேர்த்து மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 53-ஆக இருக்கிறது. மோடியைத் தவிர்த்து 21 கேபினெட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் பொறுப்பில் இருந்தனர். அப்போது அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், விரிவாக்கத்தில் பெண்கள் மற்றும் எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கும், இதுவரை வாய்ப்புகள் வழங்கப்படாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

    ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக உறுதியான வட்டார தகவல்கள் இன்று காலை முதலே டெல்லியிலிருந்து தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருந்தன. முன்னதாக, பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தது.


    தமிழகத்தின் சார்பாக மத்திய அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் உள்ள போதிலும், அவர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடாதவர்கள். மேலும், எஸ்.சி சமூக பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் இந்தமுறை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட புதிதாக 43 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.கவுக்கு பிரதிநிதித்துவம் வாங்கிக் கொடுத்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தற்போது மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad