Header Ads

  • சற்று முன்

    கமல் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம்.. நடிகை கன்னிகாவை மணக்கிறார்..


     

    1997 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தம் புது பூவே திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் கவிஞர் சினேகன். பாண்டவர்பூமி, மௌனம் பேசியதே , பகவதி, சாமி, கோவில், ஆட்டோகிராப், மன்மதன், ராம் , பருத்திவீரன், யோகி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். 

    அதன் பின்னர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகன், தற்போது அக்கட்சியில் இளைஞரணி மாநில செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கவிஞர் சினேகன் வரும் 29 ஆம் தேதியன்று, நடிகை கன்னிகா ரவியை கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறார்.

    இது தொடர்பாக சினேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

    இந்தத் திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ்நிலையில் காலம் நம்மை நகர்த்திச் செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.

    இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது. எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  


     

    சினேகனும், நடிகை கன்னிகாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது இருவீட்டார் சம்மதத்துடனும் திருமணம் கைகூடியிருக்கிறது. நடிகை கன்னிகா, கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் ”அமுதா ஒரு ஆச்சரியக் குறி” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். மேலும் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற  படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் மீண்டும் சீரியல் பக்கம் திரும்பிய கன்னிகா, ’கல்யாணவீடு’ என்ற சீரியலில் நாயகியாக நடித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad