Header Ads

  • சற்று முன்

    உலகின் விலையுயர்ந்த பர்கர்- அதிர்ச்சி தரும் ஒரு பர்கரின் விலை....!!


    உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவகங்களும் ஒன்று. நேரில் வந்து அமர்ந்து சாப்பிடும் படியான உணவகங்கள் எல்லாம் தற்காலிகமாக மூட வேண்டியுள்ளது. ஆனால் டச் உணவகமாக ராபர் ஜேன் டி வீன் ஆஃப் தி டால்டன்ஸ் டின்னர் என்ற உணவகத்தில் விலையுயர்ந்த பர்கர் ஒன்றை தயாரித்துள்ளனர். 

    இந்த பர்கரின் மதிப்பு 5 ஆயிரம் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ.4.41 லட்சம் ஆகும். மேலும் டச் செப் செய்த இந்த பர்கருக்கு ‘ தி கோல்டன் பாய்’ என பெயரிடப்பட்டுள்ளது. இவ்வளவு விலை உயர்வுக்கு  காரணம் அதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் தான். தங்க இழைகள், கேவியர், வாய்யூ பீப்,  கிங் கிரேப், ஸ்பெஷனிஷ் பலெட்டா போன்ற பல விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பர்கரை நெதர்லாந்தை சேர்ந்த பிஸ்னஸ் மேன் ஒருவர் வாங்கினார். இதில் கிடைத்த பணத்தை ஒரு என்ஜிஒ அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad