Header Ads

  • சற்று முன்

    சொகுசு கார் - நடிகர் விஜயின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை...

     



    நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் என்ற சொகுசு காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு நுழைவு வரியாக ரூ 1.6 கோடி நிர்ணயித்த நிலையில் அதை செலுத்தினால்தான் காரை பதிவு செய்வோம் என ஆர்டிஓ அலுவலகம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து அந்த காருக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரி உள்பட அனைத்து வரிகளையும் செலுத்திய விஜய், நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

     

    இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார்.

     

    இந்நிலையில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு மனு நாளை நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன்பு விசாரணைக்கு வருகிறது. அபராதம் விதித்ததையும், தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்ட வார்த்தைகளை நீக்க கோரியும் விஜய் மனு தாக்கல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad