Header Ads

  • சற்று முன்

    பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு...ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி.....

     

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பயிலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததில் 2 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் 15 நாட்கள் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


    மேலும் அந்த பள்ளி ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் அவரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்படுவார் என செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. 



     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad