Header Ads

  • சற்று முன்

    நடிகர் ஆதியின் ஹிப்ஹாப் தமிழா யூடியூப் சேனல் முடக்கம் - வீடியோக்களும் அழிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..




     

    ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில், இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி.. ஆரம்பத்தில் இவர் வெளியிட்ட ‘கிளப்ல மப்புல’, ‘வாடி புள்ள வாடி’ போன்ற ஆல்பம் பாடல்கள் மிகவும் பாப்புலர். இதனடிப்படையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான விஷாலின் ‘ஆம்பள’ படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

     தொடர்ந்து ’இன்று நேற்று நாளை, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஆதி, ” மீசைய முறுக்கு’ படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.. தொடர்ந்து ‘ நட்பே துணை’ நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘ சிவக்குமாரின் சபதம்’ என்ற படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார். இந்தப்படத்தின் இறுதிகட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்த அவருடைய பாடல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் ஹிப்ஹாப் தமிழா என்ற சேனலின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸை கொண்டிருந்த யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad