Header Ads

  • சற்று முன்

    மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் - கர்நாடக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்.....


    காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. மேலும் பிரதமர் சந்திப்பின்போதும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், 'மேகதாது அணை கட்டுவதன்மூலம், தமிழகம், கர்நாடகா என இரு மாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம். மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது' எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், குந்தா மற்றும் திலகல்லா என்ற இரண்டு நீர்மின் திட்டங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டங்களுக்கு கர்நாடக அரசின் ஒத்துழைப்பையோ, அனுமதியையோ தமிழக அரசு கோரவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெங்களூரு நகரத்தின் குடிதண்ணீர் வசதிக்காகவே உச்ச நீதிமன்ற அனுமதியின்படி மேகதாது அணை கட்டப்படுகிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


    இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. எனவே, பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. மேகதாது அணைக் கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தை ஏற்க இயலாது. 

    குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. தமிழகம் - கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad