Header Ads

  • சற்று முன்

    ட்விட்டர் கணக்கை மீட்டு கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நன்றி... குஷ்பூ ட்விட்...

     


    நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நவர்களால் ஹேக் செய்யப்பட்டது. 1.03 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட குஷ்பூவின் ட்விட்டர் கணக்கில் இருந்த பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டது. மேலும் அவரது பெயர் மற்றும் புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். அதில், கடந்த சில தினங்களுக்கு முன் என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், அதில் மேற்கொள்ளப்படும் பதிவுகள் தன்னுடையது அல்ல என்றும் தெரித்துள்ளார். 

    இதுகுறித்து நடிகை குஷ்பூ டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்ததை அடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு  உத்தரவிட்டுள்ளார். பின்பு சைபர் கிரைம் போலீசார் குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்பதை கண்டுபிடிக்குமாறும், அந்த கணக்கை மீண்டும் அவருக்கே வழங்குமாறும் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் கணக்கை மீட்டுக்கொடுத்ததற்காக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். அதனை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

     My gratitude to #DGP #ShylanderBabu ji and his team for their swift action and helping me to retrieve my Twitter account, safe and sound. 🙏🙏🙏🤗

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad