Header Ads

  • சற்று முன்

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் : தவிக்கும் ஹிமாச்சல் மக்கள் ...

     




    ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்ததால் விமான நிலையங்களும் மூடப்பட்டு, பொதுப்போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

     

    தர்மசாலா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் மற்றும் வாகன்ஙகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. தர்மசாலா நதி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால், சாலைகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளன. தர்மசாலாவின் சித்ரு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அவற்றை சரிசெய்யும் பணிகளில் பொதுப்பணித் துறையினருடன், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

     

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. பேரிடரில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் என்று அமித் ஷா  தெரிவித்திருக்கிறார். 


     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad