Header Ads

  • சற்று முன்

    மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. அடுத்த படம் இவர் கூடதான்...

     


    அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும்,  நடிப்பு , தயாரிப்பு என தன்னை  தனிவழியில் பிரதிபலித்துக்கொண்டிருந்தார் உதயநிதி.. இவருக்கு அரசியல் வராதுப்பா..!, அரசியலுக்கெல்லாம் வர மாட்டார் என பலரும் சொல்லிக்கொண்டிருந்த சூழலில், திடீரென 2021 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி  அதிரடி காட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.. 

    தேர்தலில் நின்று, வெற்றி பெற்று  இன்று சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உருவெடுத்திருக்கும் உதயநிதி, களப்பணியிலும் சிறப்பாகவே செயல்பட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.. இனி முழு நேர அரசியல்வாதியாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில், மீண்டும் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார் உதயநிதி..  

    ஏற்கெனவே மகிழ் திருமேணி இயக்கத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் படத்தின் படப்பிடிப்புல் பங்கேற்று நடித்து வருகிறார். சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், உதயநிதி - ஆரவ் சம்பந்தப்பட்ட  காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து  இந்தி ரீமேக்கான ‘ ஆர்டிகிள் 15’ மற்றும் ’கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். 

    இந்நிலையில்  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இதில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 

     

    'கர்ணன்' திரைப்படத்துக்குப்பின், துருவ் விக்ரமை இயக்க இருக்கிறார் மாரி செல்வராஜ்.  ஒரு கபடி வீரரின் பயோபிக்கான,  இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தை முடித்த பின்னரே உதயநிதி படத்தை இயக்க  இருக்கிறார் மாரி செல்வராஜ். 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad