Header Ads

  • சற்று முன்

    விபத்துக்குள்ளாகி உயிர் சேதம் ஏற்பட்டதால் நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்...


    மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த யாஷிகா ஆனந்த், இனிமே இப்படி தான் படம் மூலம் 2015 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு பிரபலமானவர். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் தன் நண்பர்களுடன் காரில் பயணம் சென்றார். அப்போது காரை அதிவேகமாக ஓட்டி சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி  பயங்கர விபத்துக்குள்ளானது. அதில்  காரில் பயணித்த நடிகை யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நடிகை யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதில் அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. 

    இது குறித்து  மகாபலிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன. மேலும் இந்த சம்பவம் குறித்து நடிகை யாஷிகாவிடம் வாக்குமூலம் பெற்றன. அதில் யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் தனது தோழி சீட் பெல்ட் அணியாததால் வெளியே தூக்கி வீசப்பட்டார். மேலும் விபத்து நடந்த பிறகு தனது நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்ததை பார்த்து காப்பாற்றுவதற்காக கூச்சல் விட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் அவர் மது போதையில் இல்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த் கொடுத்த இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    இந்நிலையில் நடிகை யாஷிகா உயிர்சேதம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை  இயக்கியதால் அவருடைய ஓட்டுநர் உரிமத்தை மகாபலிபுரம் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் யாஷிகாவின் உடல்நிலை மோசமாக உள்ளதால் சிகிச்சை முடிந்த பின் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad