Header Ads

  • சற்று முன்

    தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு....


    தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 2, 3, மற்றும் 4 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.



     



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad