Header Ads

  • சற்று முன்

    ’சர்பட்டா பரம்பரை’ படத்தின் ட்ரெய்லர் நாளை ரிலீஸ்...

     


    பா. ரஞ்சித்இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சர்பட்டா பரம்பரை’. பாக்சிங்கை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இந்தப்படத்தில், துஷாரா விஜயன், கலையரசன் , சஞ்சனா நடராஜன், பசுபதி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

     இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். வடசென்னைப் பகுதியில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டை தான் ’சர்பட்டா பரம்பரை’ படத்தின் கதைக்களம், சர்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு பரம்பரைக்கும் இடையேயான குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படத்தின் கதை இருக்கும் என சொல்லப்படுகிறது. 


     

    ’சர்பட்டா பரம்பரை’ திரைப்படம் வருகிற (ஜூலை) 22 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் ஆர்யா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏனெனில் ஏற்கெனவே ஆர்யா, சாயிஷா நடித்த ‘டெடி’ திரைப்படம் ஓடிடியில் வெளியானதால், இந்தப்படத்தையாவது திரையில் பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

    இந்நிலையில் ‘சர்பட்டா பரம்பரை’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad