Header Ads

  • சற்று முன்

    வெளியானது சூர்யாவின் ‘வாடிவாசல்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...


     

    சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாடிவாசல்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும், இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்  இசையமைக்கிறார். சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருகிறது. 

    கதைக்களம் தெரிந்தது என்றாலும் வெற்றிமாறன்- சூர்யா கூட்டணியில் முதல் படம் என்பதாலும், காட்சிகள் மற்றும் கதாப்பாத்திரங்களின் தேர்வும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவலில் இடம்பெற்றுள்ள  முதியவரின் கதாப்பாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

     இந்நிலையில் ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாலை 5.30 மணிக்கு  ’வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. காளையின் உருவம் பொறிக்கப்பட்ட  வட்ட வடிவ காசு போன்ற சின்னம் இடம்பெற்றுள்ளது. 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad