Header Ads

  • சற்று முன்

    காவலர் உடல் தகுதி தேர்வில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு....



     
     
    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் , சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம்  11ஆயிரத்து 813 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கான  எழுத்துத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் நடத்தப்பட்டது. 
     
    கடந்த ஏப்ரல் மாதமே நடத்தப்பட வேண்டிய உடல்தகுதி தேர்வு, கொரோனா 2வது அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உடல்தகுதி தேர்வுகள் இன்று (26 ஜூலை ) தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில், இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 
     
    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் தீயணைப்பாளர் உடல்தகுதி தேர்வில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அதில், அழகாபுரி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்கிற இளைஞரும் பங்குபெற்றார். உடல் தகுதி தேர்வுகளில் ஒன்றான ஓட்டப்போட்டியில் மாரிமுத்து ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். சக இளைஞர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தபோதிலும், மாரிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
     
    தகவலறிந்து வந்த விருதுநகர் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே மாரிமுத்துவின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர். 

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad