Header Ads

  • சற்று முன்

    தங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா..?? இந்தாங்க வெள்ளி ஸ்பூன்..!! - அதிர வைக்கும் ஐஸ்கிரீம் விலை..!!


    துபாயில் ஸ்கூப்பி கபே என்ற நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் சமீபத்தில் ‘பிளாக் டைமண்ட்’ என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர். அதிர்ச்சி தரும் அந்த ஐஸ்கிரீமின் விலை 840 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 60 ஆயிரம் ஆகும். இந்த ஐஸ்கிரீமை இவ்வளவு அதிக விலைக்கு விற்க காரணம் அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தான். அதில் 22 கேரட் தங்க இழைகள், பிளாக் ட்ரூபிள், மற்றும் சாப்ரான் ஆகிய விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு தயாரிக்கின்றன. வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது. தங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா கொடுக்க முடியும்..! அதனால் இந்த ஐஸ்கிரீம் சாப்பிட வெள்ளி ஸ்பூன் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த ஐஸ்கிரீமை இந்திய நடிகை ஒருவர் வாங்கி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad