Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்...


    தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைவதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருப்பூர், விருதுநகர் ,தூத்துக்குடி, திருச்சி, சேலம் ,தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

    நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர் ,திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.



    மேலும் வருகின்ற 12ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கன மழையும், கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென்காசி ,திருப்பூர், கன்னியாகுமரி ,திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .  தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் , மன்னார் வளைகுடா பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் ,தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad