Header Ads

  • சற்று முன்

    இந்தியா சினிமாவின் இணையற்ற நடிகர்: பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு கமல் ஹாசன் புகழ்ஞலி...



    பாகிஸ்தானில் 1922இல் பெஷாவரில் பிறந்த திலீப் குமாரின் இயற்பெயர் முகம்மது யூசுப்கான். இவருக்கு வயது (98). இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994இல் பெற்றவர் நடிகர் திலீப் குமார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 

    பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 30ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இன்று காலை சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். திலீப் குமாரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் திலீப் குமாரின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

    இந்நிலையில் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

    ”இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad