Header Ads

  • சற்று முன்

    ஷீன்லேக் பெயிண்ட் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பர தூதராக ஒப்பந்தம்...


    இந்தியாவில் அத்தியாவசிய பயன்பாட்டுக்கான பூச்சுகளையும் வர்ணங்களையும் வழங்குவதில் 6 பிராண்டுகளில் முன்னணி நிறுவனமாக ஷீன்லேக் உள்ளது. 1962ஆம் ஆண்டு சிறியளவில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று சிறப்பு வகை பெயின்ட்களை
    உருவாக்குவது வரை மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு ஷீன்லேக் மரத்தாலான பொருட்களுக்கேற்ற தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட பூச்சை அறிமுகம் செய்துவைத்தது.  இந்தியாவிலேயே இப்படியொரு பூச்சை உருவாக்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையையும் இந்நிறுவனம் பெற்றது கவனிக்கத்தது. 

    பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமான ஷீன்லேக் இந்திய சந்தையில் தன்னை வலுப்படுத்தும் நோக்கில் உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோத்துள்ளது. இந்திய சந்தையில் வலிமையாவது ஒருபுறம் இருந்தாலும் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் தன்னுடைய கால் தடத்தைப் பதிப்பதற்கு ஏ.ஆர். ரஹ்மான் என்ற அடையாளம் துணை நிற்கும் என எண்ணுகிறது. ஷீன்லேக்கின் விளம்பர தூதராகியிருக்கும் ரஹ்மான், வருங்காலங்களில் தொலைக்காட்சி, அச்சு ஊடகம், டிஜிட்டல் தளங்கள், இணைய ஊடகங்கள் என அனைத்திலும் ஷீன்லேக் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.


    இதுதொடர்பாகப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “மிகப்பெரிய அளவில் மாற்றங்களைச் செய்து சந்தையில் அனைத்து நிறுவனங்களுடனும் போட்டியில் ஈடுபட்டு வரும் ஷீன்லேக் நிறுவனத்துடன் இணைந்து பயணிக்கவிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் தன்னை முன்னணி பிராண்டாக வளர்த்தெடுக்க முயன்று வருகிறது. அதில் நானும் ஒரு அங்கம் வகிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தக் கூட்டு முயற்சியை நானும் நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறேன்" என்றார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad