Header Ads

  • சற்று முன்

    வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன மக்கள்... மெட்ரோ ரயிலில் புகுந்தது வெள்ளநீர்...


    சீனாவின் ஹெனான் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்  பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் எங்கும் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

     

    இந்நிலையில் அந்நாட்டு வானிலை மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த 3 நாள்களில் மட்டும் 640 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துவரும் வெள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரதான போக்குவரத்து சேவைகளான மெட்ரோ ரயில்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

    வழக்கமான மழை அளவைக் காட்டிலும் 5 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad