Header Ads

  • சற்று முன்

    டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்....

     





    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்த தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. எஸ் முனியநாதன் ஐஏஸ், பேராசிரியர் கே ஜோதி சிவஞானம், முனைவர் கே அருள்மதி, ஏ.ராஜன் மரியசூசை ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
    இந்த 4 உறுப்பினர்களும் பதவியேற்கும் நாளிலிருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


    இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad