Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் சென்னை, மதுரை சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை...


    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடுகாரணமாக தமிழகத்தில் கோவை ,நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7.30 மணி அளவில் துவங்கி பலத்த இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும்  பரவலாக இதேபோன்று பெய்துள்ளது. ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், கொரேட்டூர், பல்லாவரம், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை, கிண்டி, ஈக்காட்டு தாங்கல், புரசைவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், ரமாபுரம், அயனாவரம், குரோம்பேட்டை, அசோக் நகர், திருவி.க நகர், கோயம்பேடு, திருமுல்லைவாயல் , மாதவரம், புழல், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

     மேலும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad