Header Ads

  • சற்று முன்

    இந்தியாவில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி...ஒன்றிய சுரங்க அமைச்சகம் தகவல்...



    இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுடன் 2021 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கனிம உற்பத்தி 23.3% ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  

    2020-21 ஆம் ஆண்டில் ஏப்ரல்-மே  வரையிலான காலகட்டத்தில் மொத்த கனிம வளர்ச்சி என்பது 29.4% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் நிலக்கரி 532 லட்சம் டன், பயன்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அளவு 2,660 மில்லியன் கியூப் மீ , லிக்னைட் 31 லட்சம் டன், கச்சா எண்ணெய் 24 லட்சம் டன், பாக்ஸைட் 1,643 டன், காப்பர் 10 ஆயிரம் டன், தங்கம் 31 கிலோ,  இரும்பு தாது 234 லட்சம் டன், சுண்ணாம்பு 322 லட்சம் டன், பாஸ்போரைட் 117 ஆயிரம் டன், டைமண்ட் "0" காரட் உற்பத்தி ( Produce ) செய்யப்பட்டுள்ளது. 


    மேலும் 2020ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 2021 மே மாதம், காப்பர் 120.4%,  பயன்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அளவு 12. 1% , மெக்னீசியம் 19.6% , நிலக்கரி 6.6% , இரும்பு தாது 1.3% ஆக உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், துத்தநாகம் -0.5% , பாக்ஸைட் -1.5% , பாஸ்போரைட் -2.1% , கச்சா எண்ணெய் -6.3% மற்றும் தங்கம் -78.3% ஆக உற்பத்தி  வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கனிம உற்பத்தியில் மொத்தமாக வளர்ச்சி கண்டாலும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad