Header Ads

  • சற்று முன்

    ”பாக்ஸிங் என்ன உங்க அப்பமூட்டு சொத்தா??? ” - வெளியானது 'சர்பாட்டா பரம்பரை’ பட ட்ரெய்லர்..


    பா. ரஞ்சித்இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சர்பட்டா பரம்பரை’. பாக்சிங்கை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இந்தப்படத்தில், துஷாரா விஜயன், கலையரசன் , சஞ்சனா நடராஜன், பசுபதி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 


     இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். வடசென்னைப் பகுதியில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டை தான் ’சர்பட்டா பரம்பரை’ படத்தின் கதைக்களம், சர்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு பரம்பரைக்கும் இடையேயான குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படத்தின் கதை இருக்கும் என சொல்லப்படுகிறது.
     

     
     
    இந்நிலையில் ‘சர்பாட்டா  பரம்பரை’ படம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. மதியம் 12 மணியளவில் நடிகர் சூர்யா ட்ரெய்லரை வெளியிட்டார்.. தெறிக்கும் வசனங்கள் மற்றும் காட்சிகள் நம்மை 80 களுக்கு அழைத்துச் செல்கிறது.. 

    சர்பாட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad