Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்...


    மிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றம் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சேலம்,  மற்றும்  டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    மேலும் நாளை தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது. 

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அந்த  பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad