Header Ads

  • சற்று முன்

    ’சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினருக்கு உதயநிதி வாழ்த்து...

     


    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.

    இந்தப்படத்தின் கதைக்களம் 70 களில் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வை காட்சிப்படுத்துவது போல் அமைந்திருக்கும்... இதில் திமுக கட்சிக்காரராக பசுபதி நடித்திருப்பார். மேலும், .படத்தில் கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரின் பெயர் மற்றும் படங்கள் இடம்பெற்றிருக்கும்.. இந்தப்படம் திமுகவுக்கு ஆதரவான படம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது..

    இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

    "70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள 'சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

    கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கென், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.இரஞ்சித்-க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்"

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad