Header Ads

  • சற்று முன்

    ”என்னை நடிக்க விட மாட்றாங்க.. உதவி பண்ணுங்க..”- செம்பருத்தி புகழ் கார்த்தி வெளியிட்ட வீடியோ..

     


     சீரியல்கள் என்றால் எப்போதுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்புதான்.. அப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் செம்பருத்தி... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.. இதில் ஆதி கதாப்பாத்திரத்தில் ‘ஆஃபீஸ்’ தொடர் புகழ் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார்.. கதாநாயகியாக ஷபானா நடித்து வந்தார்.. 

    இந்த சீரியல் 800 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த போது, கார்த்திக் ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அக்னி நடித்து வருகிறார்.. சீரியலில் இருந்து விலகிய பின் கார்த்திக் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.. ‘முகிலன்’ என்ற வெப் தொடரில் மட்டும் நடித்தார். 

    நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் கார்த்திக் ராஜ், தன்னை எந்த படத்திலும் நடிக்க விடாமல் சிலர் அரசியல் செய்வதாகவும், மக்கள் தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தான் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும், அதற்கு பண உதவி செய்யுமாறும் உதவி கோரியிருக்கும் கார்த்திக், வங்கி விவரங்களையும் வெளியிட்டுள்ளார். 

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad